Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மட்டுமே இது போன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM