Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 16 அக்டோபர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக பந்திபூர் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலும் காட்டுப் பன்றிகள் உயிரிழந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளான கக்கநல்லா, நாடுகாணி, தாளூர், சேரங்கோடு, பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டும் மாவட்ட எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN