Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் (என் ) முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் (என்ற)அரவிந்த் குமார் என்பவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,
இந்த வழக்கு விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளி அரவிந்த் @ அரவிந்த் குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Hindusthan Samachar / V.srini Vasan