Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 16 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் மேற்சொன்ன இணையதள முகவரியில் இணையதளம் வாயிலாக 10.10.2025 முதல் விண்ணப்பிக்கலாம். (இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்). விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b