Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 16 அக்டோபர் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும்
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலிலுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரும் சமீப காலமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் லப்பர் பந்து, பார்க்கிங், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாரள பிரபு, ஓ மனப்பெண்ணே மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை வெளிவர உள்ள டீசல் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அவர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சாமி தரிசனம் செய்தார், தொடர்ந்து கோயில் சார்பாக அவருக்கு பிரசாதம் மற்றும் மாலை மரியாதை வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரம் அருகே சாஷ்டாங்கமாக விழுந்து தரிசனம் செய்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி தொடர்ந்து மகிழ மரம் அருகே நின்று நவ கோபுரங்களையும் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் பக்தர்கள், பொது மக்கள், உள்ளிட்டோர் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN