இன்று பிரேசில் துணை ஜனாதிபதி, இந்திய துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு
புதுடெல்லி,16 அக்டோபர் (ஹி.ச.) பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கான மந்திரி ஜெரால்டோ ஆல்க்மின், அவருடைய மனைவி மரியா லூசியா ஆல்க்மினை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்
இன்று பிரேசில் துணை ஜனாதிபதி, இந்திய துணை ஜனாதிபதியுடன்  சந்திப்பு


புதுடெல்லி,16 அக்டோபர் (ஹி.ச.)

பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கான மந்திரி ஜெரால்டோ ஆல்க்மின், அவருடைய மனைவி மரியா லூசியா ஆல்க்மினை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள 3 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வந்தடைந்த அவருக்கு, விமான படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர் நேற்று சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை அவர் இன்று சந்தித்து பேசுகிறார்.

இதன் பின்னர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலையும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மந்திரி ஹர்தீப் சிங் புரியையும் தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்.

நாளை அவர், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM