கால்வாய் அமைக்க நிதி இல்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி, 16 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மோட்டாம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவராக காந்தாமணி துரைசாமி என்பவர் பணியாற்றி
UdhayaSuriyan MLA


கள்ளக்குறிச்சி, 16 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மோட்டாம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவராக காந்தாமணி துரைசாமி என்பவர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் முறையான வடிகால் வசதி மற்றும் முறையான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் கழிவு நீர் வெளியேற்ற வழி இல்லாமல் குடிநீர் குழாயில் கழிவு நீரும் மழைநீருடன் கலப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனிடம் கேட்டால் நிதி இல்லை என தெரிவித்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் முன்பு சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வீடியோ வெளியிட்டு வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN