வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச) பாஞ்சாலங்குறிச்சியின் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆங்க
Ttv


Tweet


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)

பாஞ்சாலங்குறிச்சியின் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவரும், பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு நல்லாட்சி தந்த மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினம் இன்று.

தூக்கு மேடையில் நின்ற போதும் என் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதாகக் கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ