வேப்பேரி தீயணைப்புத்துறை சார்பில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு புல்லட் பேரணி
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் விபத்தில்லா தீபாவளியை மக்கள் கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பில் வேப்பேரியில் விழிப்புணர்வு புல்லட் பேரணி நடைபெற்றது. மத்திய சென்னை
Bullet


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில்

விபத்தில்லா தீபாவளியை மக்கள் கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பில் வேப்பேரியில் விழிப்புணர்வு புல்லட் பேரணி நடைபெற்றது.

மத்திய சென்னை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா அவர்கள் தலைமையில் பேரணி நடந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், 10 நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேப்பேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, மாநகர ஆணையர் அலுவலகம், ஈ.வி.கே. சம்பத் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை,

தாச பிரகாஷ் மற்றும் புரசைவாக்கம் ஆர்.கே. சிக்னல் ஆகிய முக்கியப் பகுதிகளில் சென்று பொதுமக்களுக்கு பட்டாசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தீபாவளியின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது, அத்தியாவசிய தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ