Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, பேரூர் உட்கோட்டம், ஆலாந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணபதிக்காரர் தோட்டம், ஏழு வாய்க்கால், கோட்டைக்காடு பகுதியில் 30.09.2018 அன்று இரவு நடைபெற்ற “கிடா விருந்து” நிகழ்ச்சியில், விநாயகர் சதூர்த்தி நன்கொடை தொகை வசூல் குறித்து ஏற்பட்ட தகராறில், நாகராஜ் ( வயது 21 ) என்பவரை, அப்போதைய பா.ஜ.க கணபதி பகுதி துணைத் தலைவர் கந்தசாமி (வயது 29/2018) என்பவர் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் கடுமையாக காயம் அடைந்த நாகராஜ், முதலில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பின்னர் K.G. மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி 01.10.2018 அன்று உயிரிழந்தார்.
இதை அடுத்து, கொலை முயற்சி வழக்கு (U/s 294(b), 307 IPC) கொலை வழக்காக (U/s 294(b), 302 IPC) மாற்றப்பட்டது.
குட்டி @ கந்தசாமி 03.10.2018 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
ஆலாந்துறை காவல் நிலையம் பதிவு செய்த குற்ற எண் 166/2018 அடிப்படையில் நடைபெற்ற வழக்கு (S.C.No.96/2019) கோயம்புத்தூர் 5 - வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி இன்று ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு அளித்தார்.
இந்தப் தீர்ப்பால் கோவை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan