Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் உள்ளதால் அவ்வப்பொழுது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது இதனை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஐந்து மாடுகள் அங்கேயே நின்று கொண்டு இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .
ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan