Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென்று சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் உடனிருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த ஓபிஎஸ் தரப்பினர்,
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகும் என்றும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே ரஜினிகாந்த்தை சந்தித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை ஓ.பி.ரவீந்திரநாத் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலும், அவர் எக்ஸ் பதிவில்,
இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன் என்று ஓ. பி. ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ