Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
புத்தாடை, பட்டாசு வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.வெளியூர்களில் வேலை செய்பவர்க்ள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக விமானங்களின் பயண டிக்கெட் கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 ஆக இருந்து வந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது.
அதே போல், சென்னை முதல் திருச்சி வரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608 ஆக இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது.
இதைப் போல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் சாதாரண நாட்களை விட இன்று
(அக் 17) பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை-மும்பை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.21,960 வரை அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.22,169 வரை அதிகரித்துள்ளது.
சென்னை-ஐதராபாத் சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது.
சென்னை-கவுகாத்தி சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.21,639 வரை அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b