பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி துணைதலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி வாயிலாக ஆஜரான வழக்கறிரும், பாஜக மாநில செயலா
Aahwathaman


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி துணைதலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காணொலி வாயிலாக ஆஜரான வழக்கறிரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமன், வழக்கறிஞர் கோட் அணியாமல் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்து ஆஜரானார்.

இதைப் பார்த்த நீதிபதி நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா என அதிருப்தி தெரிவித்தார்.

தோள்பட்டை வலிக்காக தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், அதனால் கோட் அணியாமல் ஆஜரானதாகவும் அஸ்வத்தாமன் கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இது தொடர்பாக அஸ்வத்தாமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுப்பதாகவும் எனவே அக்டோபர் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ