வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பு மீதும் எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டது - உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச) வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பு மீதும் எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டது? என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது? வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவ இடத்தில் இருந்த
Car thiruma


High


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச)

வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பு மீதும் எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டது? என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது?

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் கைப்பற்றி காவல்துறையை 2 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் விசிக தலைவர் பிரச்சனையை தூண்டும் விதத்தில் செயல்படுவதாக தெரிகிறது என நீதிபதி தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ