மலைப்பகுதிகளில் உணவு பொருட்களை பொதிய பிளாஸ்டிக்-குக்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமா? -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச) ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உணவு பொருட்களை பொதிய பிளாஸ்டிக்-குக்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமாr என நவம்பர் 14 ம் தேதிக்குள் பெரிய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுற்ற
High


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச)

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உணவு பொருட்களை பொதிய பிளாஸ்டிக்-குக்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமாr என நவம்பர் 14 ம் தேதிக்குள் பெரிய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தது தொடர்பான வழக்கில் விதிகளின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

வழக்கின் விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

Hindusthan Samachar / P YUVARAJ