விரைவில் டெல்லி அரசு சார்​பில் வாடகை கார் சேவை அமல்
புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.) ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை
விரைவில் டெல்லி அரசு சார்​பில் வாடகை கார் சேவை அமல்


புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.)

ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.

இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது.

இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான திட்​டத்தை தயாரிக்க அவர் உத்​தர​விட்​டார்.

இந்​தத் திட்​டத்​தில் டாக்ஸி ஓட்​டுநர்​கள் யாருக்​கும் கமிஷன் கொடுக்க

தேவை​யில்​லை.

இதனால் பயணக் கட்​ட​ண​மும் குறை​யும் என்​ப​தால் ஓலா, உபேர் நிறு​வனங்​கள் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது.

இந்த சேவைக்​காக டாக்ஸி ஓட்​டுநர்​களை கொண்ட

கூட்​டுறவு சங்​கம்

உரு​வாக்​கப்பட உள்​ளது.

Hindusthan Samachar / JANAKI RAM