Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டப் பேரவையில் 2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை டிச.15ம் தேதி முதல் வழங்கப்படும் என கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்த்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
இ்த்திட்டத்தில், கூடுதலான மகளிர் பயனடைய வேண்டுமென்ற அடிப்படையில் முதல்வர் சில விதிகளை தளர்த்திக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, அரசு மானியத்தில், 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், ஓஏபி பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று முதல்வர் அவையில் அறிவித்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மகளிர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே, புதிதாக உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் 2025 நவம்பர் 30ம்தேதிக்குள் முடிவடையும் என்று கூறிக்கொள்கிறேன். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் மாதம் 15ம்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b