Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 17 அக்டோபர் (ஹி.ச.)
பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயிலானது கடந்த சில நாட்களாக பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் முழுமையாக ஈரோடு - செங்கோட்டை இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு - செங்கோட்டை இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை 18.10.25 சனிக்கிழமை முதல் 21.10.25 செவ்வாய்க்கிழமை வரை, ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக இயக்கப்படும்.
அதேபோல், செங்கோட்டை - ஈரோடு இடையே நாளை மறுநாள் 19.10.25 ஞாயிற்றுக்கிழமை முதல் 22.10.25 புதன்கிழமை வரை செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரை முழுமையாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN