Enter your Email Address to subscribe to our newsletters
உசிலம்பட்டி, 17 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் முதல் தங்கம் விலை வரை உயர்வை எட்டியுள்ளது.
அந்த வகையில் பண்டிகை காலங்களில் பூக்களின் பங்கும் இருக்கும் பட்சத்தில் பூக்களின் விலையும் அதிகரிக்க துவங்கியுள்ளது, அவ்வாறு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக கடந்த வாரம் வரை கிலோ 600 க்கு விற்பனை ஆன மல்லிகை பூ இன்று 1500 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் 1000 ரூபாய்க்கும், அரளி 150, மரிக்கொழுந்து 100, பன்னீர் ரோஸ் 150, பட்டன் ரோஸ் 200, கோழி கொண்டை 100 என இரு மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மழை காரணமாகவும், வரத்து குறைவு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் எனவும் மல்லிகை 2000 முதல் 3000 வரை உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J