இன்று ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பிய கவர்னருக்கு எதிரான தமிழக அரசு மனுக்கள் மீது விசாரணை
புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.) கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, தமிழ்நாடு உடற்கல்வியில், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை
இன்று ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பிய கவர்னருக்கு எதிரான தமிழக அரசு மனுக்கள் மீது  விசாரணை


புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.)

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, தமிழ்நாடு உடற்கல்வியில், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதிக்குத் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார்.

கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், இவ்வாறு அனுப்பி வைத்ததை ரத்துச் செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி, டி.ஹரீஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM