Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)
லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் முதல் கோவை வரை உள்ள பைபாஸ் சாலையில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது ஓய்யாங்காடு பவானி முதல் ஈரோடு வரை உள்ள சர்வீஸ் சாலையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது ஓட்டுநர் பின்புறம் உள்ள படுக்கை சீட்டின் அடியில் இரண்டு மூட்டைகளில் 13 மற்றும் 12 கிலோ எடையுள்ள மொத்தம் 25 கிலோ கஞ்சா கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியின் பின்புறத்தில் 504 மூட்டைகளில் சோளம் இருந்தது.
இதை அடுத்து லாரி ஓட்டுநர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மற்றும் மதுரை மாவட்டம் சேர்ந்த தவசி ஆகியோரைப் பிடித்து நடத்திய விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த தனக்குமார் என்பவருக்கு சோளம் மூட்டைகளை ஏற்றி சென்றதாகவும், லாரியின் உரிமையாளரான உத்தப்ப நாயக்கனூர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பூ பாண்டி கேட்டுக்கொள்ள அவருக்காக ஆந்திராவில் கஞ்சாவை வாங்கி ஈரோட்டைச் சேர்ந்த சௌந்தர் என்பவரிடம் விற்பதற்காக வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர்.
அதன் பேரில் அந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர். அவர்களை கைது செய்து கோவை இன்றி இன்றியமையா பண்டக மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு கூறினார்.
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு பேருக்கும் தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் லாரி ஓட்டுநர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் தவசி ஆகியோருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும், லாரி உரிமையாளரான பூ பாண்டிக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் மற்றும் கஞ்சாவை வாங்க இருந்த ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சௌந்தர் என்பவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் என மொத்தம் ஏழு லட்ச ரூபாய் அபராதம் விதித்தும், அதைக் கட்ட தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Hindusthan Samachar / V.srini Vasan