தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது த.வெ.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், கட்சிகளின் கூட்டங்களில
Tvk


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

த.வெ.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்க தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கூடிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ