Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 17 அக்டோபர் (ஹி.ச.)
கரூரில் கடந்த 27 ஆம் தேதி வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்த வழக்கு முதலில் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு SIT சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். மேலே கடந்த 13 ஆம் தேதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ADSP பிரேமானந்தா தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணை 680 பக்கம் கொண்ட கோப்புகளை SIT இடம் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து SIT அதிகாரிகள் இன்று 1316 பக்கங்கள் கொண்ட விசாரணை கோப்புகளை CBI அதிகாரியிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கிணங்க இந்த கரூர் துயர சம்பவம் CBI விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கரூர் தான்தோன்றி மலை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு ஆறு பேர் கொண்ட குழுவினருடன் CBI அதிகாரிகள் நேற்று இரவு கரூர் வந்துள்ளனர்.
அதை தொடர்ந்து இன்று SIT தனது 1,316 பக்ககங்கள் கொண்ட விசாரணை கோப்புகளை சிபிஐ இடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN