சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய பரவலாக மழை
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 24 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ
சென்னையின்  பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 24 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி.நகர், ஆர்.ஏ.புரம், பட்டினப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே.நகர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b