Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 17 அக்டோபர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ப.நீதிபதிகள் மன்ற துணை தலைவர் எம்.குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
எனது கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும், விவசாய கூலி தொழிலாளிகள் ஆகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எங்கள் கிராமம் வழியாக செல்லக்கூடிய அம்புலி நதியானது நீர் பாசனத்திற்கு மிக முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், அம்புலி நதியில் நீர் திறக்கப்படவில்லை என்றால் எங்க கிராமத்தில் உள்ள முலகுளம் மட்டுமே ஒரே நீர் ஆதாரம். இதனை நம்பிதான் இப்பகுதி விவசாயம் செய்யபடுகிறது.
இந்நிலையில் சிலர் முலகுளம் கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி நீர்வரத்தை தடுத்து வருகின்றனர். எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே முலகுளம் கண்மாய் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்தை சரி செய்து தர வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள், ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோரிடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மாவட்ட வருவாய் துறை தரப்பில் சம்பந்தப்பட்ட இடம் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட முலகுளம்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து முறையாக அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN