Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இன்று (17.10.2025) தலைமைச் செயலகத்தில் காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி கேழ்வரகு மாவு மற்றும் காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றின் விற்பனையை BLINKIT விரைவு வணிக தளத்தில் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கூட்டுறவு தயாரிப்புகளான காஞ்சி பாசுமதி அரிசி (1Kg), காஞ்சி கேழ்வரகு மாவு (500g), காஞ்சி நாட்டுச் சர்க்கரை (500g), காஞ்சி கோதுமை மாவு (500g), கம்பு மாவு (500g) மற்றும் கடலை மாவு (250g) ஆகியவை விரைவு வணிக தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
இச்சேவையினை பெற பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் Blinkit என்ற விரைவு வணிக மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் கூட்டுறவுப் பொருட்களை ஆர்டர் செய்துகொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.க.நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சா.ப.அம்ரித்., இணைப் பதிவாளர் சிவக்குமார் உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b