Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 17 அக்டோபர் (ஹி.ச.)
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் 67% வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும்.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை இங்கு உள்ள வனப்பகுதியும் கிராமங்களும், ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருக்கும்.
இந்நிலையில் நீலகிரி வனக்கோட்டத்தில் பெரும்பாலும் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளதால் இங்கு காட்டெருமைகள், மான்கள், புலி, சிறுத்தை, கரடி உட்பட அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.
பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் பட்டாசு சத்தம் கேட்டால் மிகவும் அச்சமடைவதோடு வேறு இடத்திற்க்கு இடமாறும் நிலையும், கிராமங்களுக்குள் வரும் நிலை ஏற்படும் என்பதால், நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் கிராமங்களிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்ப்படுத்த வேண்டாம் எனவும் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பட்டாசு வெடிப்பதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN