Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், திமுக தீர்மானக் குழு செயலாளருமான நா.கார்த்திக் திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி கிழக்க மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan