பிரதமர் மோடி தீபாவளியை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு
புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் வரும் 20-ந் தேதி கொண்டாடப்படும் இந்த ஆண்ட
பிரதமர் மோடி தீபாவளியை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு


புதுடெல்லி, 17 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் வரும் 20-ந் தேதி கொண்டாடப்படும் இந்த ஆண்டுக்கான தீபாவளியை பிரதமர் மோடி கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடி இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் லடாக்கின் சியாச்சினிலும், 2015-ம் ஆண்டில் பஞ்சாபின் அமிர்த சரசில் உள்ள தோக்ராய் போர் நினைவிடத்திலும், 2016-ம் ஆண்டில் இமாசல பிரதேசத்தின் சும்டோவிலும் (இந்திய-சீன எல்லை), 2017-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பகுதியிலும், 2018-ம் ஆண்டில் உத்தரகாண்டின் ஹர்சிலில் உள்ள இந்தோ திபெத் படையினருடனும், 2019-ம் ஆண்டில் காஷ்மீரின் ரஜோரியிலும், 2020-ம் ஆண்டில் ராஜஸ்தானின் லோங்கேவாலாவிலும், 2021-ம் ஆண்டில் காஷ்மீரின் நவுஷெராவிலும், 2022-ம் ஆண்டில் கார்கில் போர் நினைவிடத்திலும், 2023-ம் ஆண்டில் இமாசலபிரதேசத்தின் லெப்சாவிலும், 2024-ம் ஆண்டில் குஜராத்தின் சர் கிரீக்கிலும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM