பூனேவில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்து விற்பனை - ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 1,640 மாத்திரைகள் பறிமுதல்
கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.) கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப
Pills worth Rs 5 lakh smuggled from Pune to Coimbatore by train and sold: 1,640 tablets seized and one person arrested in a city special police operation!


Pills worth Rs 5 lakh smuggled from Pune to Coimbatore by train and sold: 1,640 tablets seized and one person arrested in a city special police operation!


கோவை, 17 அக்டோபர் (ஹி.ச.)

கோவை, கரும்புக்கடை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படை காவல் துறையினருடன் கரும்புக்கடை காவல் துறையினர் இணைந்து அந்த பகுதியைச் நடத்திய சோதனையின் போது அப்பாஸ் என்பவர் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பு உள்ள 1,640 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புனே நகரத்தில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர் மீது ஏற்கனவே போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அப்பாஸை மீது வழக்கு பதிவு செய்த கரும்புக்கடை காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Hindusthan Samachar / V.srini Vasan