Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை அக் 20 கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (அக்.,18) மற்றும் நாளை மறுநாள் (அக்.,19) சனி, ஞாயிறு என்பதால், தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் அனுபவிக்க, முன்கூட்டியே ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன.
பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது.
இதனால், நாளைக்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (அக் 17) தட்கல் முறையில் முன்பதிவு செய்ய, ஒரே சமயத்தில் ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இதனால், இணையதளம் முடங்கியது. இதனால், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்த ஒரு மணிநேரத்திற்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்ததால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b