மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் மதி தீபாவளி பரிசுப் பெட்டகம் விற்பனை இன்று முதல் தொடக்கம்
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் தீபாவளியினை முன்னிட்டு ரூ. 500/- முதல் ரூ. 2500/- வரையிலான மதிப்பு கொண்ட மதி தீபாவளி பரிசுப் பெட்டகம் (Mathi Diwali Gift Hampers) கைபேசி
மதி தீபாவளி பரிசுப் பெட்டகம் விற்பனை இன்று முதல் தொடக்கம்


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் தீபாவளியினை முன்னிட்டு ரூ. 500/- முதல் ரூ. 2500/- வரையிலான மதிப்பு கொண்ட மதி தீபாவளி பரிசுப் பெட்டகம் (Mathi Diwali Gift Hampers) கைபேசி எண் வாயிலாக மொத்தம் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேஷ்டிகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப் பொருட்கள், வாழைநார் கூடைகள், கோரையில் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், பல்வேறு பொருட்களைக் கொண்ட பரிசுப் பெட்டகங்கள், உலர் பழங்களில் செய்யப்பட்ட சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த லட்டுகள், உலர் திராட்சை வகைகள், தரமான முந்திரிப் பருப்புகள், கற்சிற்பங்கள், சுடுமண்ணில் செய்யப்பட்ட ஆபரணங்கள், தரமான செக்கு எண்ணை வகைகள், ஒளித்திருவிழாவிற்கு மேலும் ஒளிக்கூட்டும் வண்ண மெழுகுவர்த்திகள், உணவுக்கு மணமூட்டும் மசாலாப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ஆகிய பயனுள்ள பொருட்கள் இன்று (17.10.2025) முதல் 20.10.2025 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

தேவையான பொருட்களை வாங்கிடவும், முன்பதிவு செய்திடவும் 76038 99270 என்ற கைப்பேசி எண்ணை அழைக்கலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b