Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 17 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் முருக பெருமானின் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
இவ்விழாவானது 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று (அக் 16) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b