கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். பயணிகள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தீபாவளி
கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

பயணிகள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு மேமு ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று(17-ந்தேதி), நாளை(18-ந்தேதி), 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் காலை 9.35 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் கோவையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுமார்க்கமாக திண்டுக்கலில் இருந்து இன்று, நாளை, 21 மற்றும் 22-ந்தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Hindusthan Samachar / vidya.b