Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணிற்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் சார்பாக உரிய நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ