போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யத் தேவையில்லை
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.) போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யத் தேவையில்லை என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாலியல்
Venkat


Tweet


சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)

போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யத் தேவையில்லை என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பாலியல் வன்புணர்வு குற்றம் தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்புணர்வு செய்யப்படாமல் குழந்தை காயமடைந்திருந்தால் அல்லது உடல்ரீதியான காயம் ஏற்பட்டிருந்தால், அந்தக் காயத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தலாம்.

குழந்தை அளித்த புகார் மற்றும் அல்லது பாதுகாவலரின் புகாரின் அடிப்படையில், பரிசோதனையின் தன்மை மற்றும் அளவைத் தீர்மானிக்கும் அதிகாரம் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கே உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தை கர்ப்பமாக இருக்கும் அல்லது பிரசவித்திருக்கும் பட்சத்தில், பாலியல் வன்முறைக்கு ஆளானோருக்கான 13 பக்கப் பரிசோதனைப் படிவத்தின் முழு விவரங்களையும் நிரப்பத் தேவையில்லை. குழந்தையின் கர்ப்ப நிலையை அல்லது பிரசவ விவரங்களை மட்டும் உரிய முறையில் பதிவு செய்தால் போதுமானது.

தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறிய கருத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

குழந்தைகளுக்கு எதிராக நடந்த சாதாரண பாலியல் குற்றங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ