Enter your Email Address to subscribe to our newsletters
நாகப்பட்டினம், 17 அக்டோபர் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் அத்திப்புலியூர் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் பன்னிர்செல்வம். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் அத்திப்புலியூரிலிருந்து பைபாஸ் சாலை வழியாக தனது காரில் நாகப்பட்டினம் வந்துள்ளார்.
பொராவச்சேரி அருகே வந்த போது காரைக்காலில் இருந்து கெமிக்கல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதி உள்ளது.
இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியதால் காரை ஓட்டி வந்த பன்னிர்செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நாகப்பட்டினம் நகர போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J