Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, அண்மையில் வாரியம் வெளியிட்டு இருந்தது.
அது ரத்து செய்யப்பட்டு, தற்போது 2708 உதவி பேராசிரியர்களை நிரப்ப, டிச., 20ல் தேர்வு நடைபெறவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானோர், அடுத்த மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த இரண்டு நாட்கள் வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். ஏற்கனவே, தேர்வெழுத கட்டணம் செலுத்தியோர், தற்போது கட்டணமின்றி தேர்வெழுதலாம். எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்காணல் குறித்து அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 'https://www.trb.tn.gov.in' என்ற இணைதளத்தை காணலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b