Enter your Email Address to subscribe to our newsletters
நாசிக், 17 அக்டோபர் (ஹி.ச.)
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய ரக தயாரிப்பான தேஜஸ் எம்கே1ஏ-ன் சோதனை ஓட்டம் இன்று (அக் 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த மூன்று விமானங்களும் ஒன்றாக வானில் பறந்தன.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாக, பயிற்சி விமானமான ஹெச்டிடி-40 மற்றும் எஸ்யு-30 எம்கேஐ விமானங்களின் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆயுதம் மற்றும் ரேடார் ஒருங்கிணைப்பு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் எப்404 ரக இன்ஜின்கள் வாங்க ரூ.5,375 கோடியில் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால், இன்ஜின்கள் விநியோகிப்பதில் நிலவும் தாமதத்தால், தற்போது வரை 4 இன்ஜின்கள் மட்டும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 இன்ஜின்கள் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆண்டுக்கு 20 இன்ஜின்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கிடைக்கும் இன்ஜின்களை வைத்து சோதனை முயற்சிகளை எச்ஏஎல் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b