சம்பள பாக்கி விவகாரம் - பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தென்காசி, 17 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்
Sanitary Workers


தென்காசி, 17 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முறையாக சம்பளம் வழங்க வலியுறுத்தி தற்போது ஏராளமான ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து செங்கோட்டை நகராட்சி அலுவலக வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கூட தங்களிடம் பணம் இல்லாத சூழலில் தங்களுக்குரிய சம்பளத்தையும், தீபாவளி போனஸ் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி தற்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்தின் காரணமாக செங்கோட்டை நகரப் பகுதியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களிடம் போலீசார் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், தற்போது வரை போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN