Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 17 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி முன்னிட்டு மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதற்காக திருக்கோவில் மூலவர் கரங்களில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பல்லாக்கில் கிராமத்தினர் வேலை மலை மீது எடுத்துச் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு குமரர் கையில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிலையில் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கையில் பால் குடத்துடன் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முயன்ற நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை இணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் வந்து ராமலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பால்குடத்துடன் மலைக்கு கீழ் உள்ள முருகன் கோவிலுக்கு மட்டும் செல்ல அறிவுறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை நடைபெற்ற வரும் சூழலில் ஆள் கூடத்துடன் மலை மீது ஏற முயற்சித்த அனுமன் சேனா அமைப்பின் மாநில துணைத்தலைவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / Durai.J