Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 அக்டோபர் (ஹி.ச.)
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 20 ஆம் தேதி திங்கள் கிழமை வருகிறது.
எனவே அதற்கு முந்தை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் இன்று இரவை தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். நாளைய தினம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படுவார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதில் இருந்து தப்பிக்கும் வகையில் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து கார் உள்பட பிற வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து இன்றே நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு - மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை, ஜிஎஸ்டி ரோடு உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றனர். குறிப்பாக கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b