தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலியில் 1,600 போலீஸார் நியமனம்
திருநெல்வேலி, 18 அக்டோபர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் 1,600 போலீஸ் பணியாளர்கள் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்
தீபாவளி பண்டிகை பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலியில் 1,600 போலீஸார் நியமனம்


திருநெல்வேலி, 18 அக்டோபர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,600 போலீஸ் பணியாளர்கள் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில், மாவட்டம் முழுவதும் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், பஜார்கள், முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி,

ஏ.டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், பட்டாலியன் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 1,600 போலீஸ் பணியாளர்கள் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 53 இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள், நபர்கள், கெட்ட நடத்தைக்காரர்கள் மற்றும் வாகனங்கள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில், தீபாவளி பண்டிகையின் போது நடைபெற்ற குற்ற வழக்குகள் பற்றிய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் போலீஸ் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித சம்பவமும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டநெரிசலை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள், Body Worn Camera கண்காணிப்புகளும் மற்றும் உயர் கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவதற்காக, காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, அமைதியான முறையில் பண்டிகையினை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் எந்த ஒரு செயல் அல்லது முயற்சி நடைபெறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித சமரசமும் இல்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் இருப்பதை கவனித்தால்

உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வோண்டும் என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளி பண்டிகை சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி

தீபாவளி நல்வாழ்த்துகளை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b