Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1353 அவசரகால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பகுதிகளில் ஏழு நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சென்றடையும் என்ற நிலையை ஐந்து நிமிடங்களாக ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ் மாற்றியுள்ளது.
கூடுதல் பணியாளர்கள் கூடுதல் ஆம்புலன்ஸ்களை நியமித்து பாதிக்கப்பட்ட இடத்தை நான்கு நிமிடத்தில் அடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என்று அதிகம் போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய பகுதிகளில் நாளை முதல் 120 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்திற்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ