Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
புனரமைப்பு பணிகள் காரணமாக வரும் 22, 23-ந் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி ரெயில்வே பணிமனையில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 22, 23-ந் தேதிகளில் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
பாலக்காடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்
(வ.எண் 16731) வரும்
22, 23-ந் தேதிகளில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது காலை 6.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரெயில், குறிப்பிட்ட 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும்.
மேலும் இந்த 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியில் இருந்தே மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b