Enter your Email Address to subscribe to our newsletters
ஒடென்ஸ், 18 அக்டோபர் (ஹி.ச.)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை, முகமது ரியான் அர்டியான்டோ- ரஹ்மத் ஹிதாயத் (இந்தோனேசியா) ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா ஜோடியை வீழ்த்தி சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் 9-21, 14-21 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லேனியரிடம் (பிரான்ஸ்) தோல்வியை கண்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM