பீகார் சட்டசபை தேர்தல் குறித்து அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
பாட்னா,18 அக்டோபர் (ஹி.ச.) பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. அதில், வாக்காளர்களை கவர ரொக்கப்பணம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்கான விரிவான செயல்திட்டம் வகுப்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.
பீகார் சட்டசபை தேர்தல் குறித்து அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு


பாட்னா,18 அக்டோபர் (ஹி.ச.)

பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.

அதில், வாக்காளர்களை கவர ரொக்கப்பணம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்கான விரிவான செயல்திட்டம் வகுப்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

அதில், மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மாநில எல்லை மற்றும் சர்வதேச எல்லை வழியாக பொருட்கள் கடத்தி வரப்படுவதை கண்காணிக்குமாறு தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.

உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்பட அமைப்புகளிடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்றும் தெரிவித்தது.

Hindusthan Samachar / JANAKI RAM