Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)
9489 பட்டாசு கடைகளுக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கி அனுமதி வழங்கி உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
வருகிற 20 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளை அமைப்பதற்காக விற்பனையாளர்கள் தரப்பிலிருந்து கடந்த 17 ஆம் தேதி வரை 10,338 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் நிரந்தர பட்டாசு கடைகள் 2918, தற்காலிக பட்டாசு கடைகள் 7, 382, அதேபோல் ஒரே இடத்தில் பல பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக 38 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் 9489 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 847 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் விற்பனையாளர்கள் பட்டாசு கடைகளை அமைத்துக் கொள்வதற்காக தீயணைப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் மட்டுமே கடைகள் அமைத்துக் கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் மேலும் விதிமுறைகளில் ஏதாவது ஒன்று மீறப்பட்டிருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தீயணைப்பு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ