சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு
தேனி, 18 அக்டோபர் (ஹி.ச.) தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகு
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


தேனி, 18 அக்டோபர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்து சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலான மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால் தொடர்ந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b